தற்போது சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி பற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் வருகின்ற 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பா.ஜ.க., காங்கிரஸ் என பல கட்சியினர் வாக்கு சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்கு திரட்ட பிரதமர் மோடி இமாச்சலப் பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
அப்போது அவ்வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்துள்ளது. இதனை பார்த்த பிரதமர் மோடி தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் தன்னுடைய வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இதனை கேட்ட அதிகாரிகள் வாகனத்தை சாலையில் ஓரமாக நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் ஆம்புலன்ஸ் சென்ற பிறகு பிரதமர் மோடி தனது வாகனத்தில் சென்றுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.