முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த நடிகர்கள் பற்றிய தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.
இந்த வரிசையில் முதலில் நாம் பார்க்கப்போவது நடிகர் மோகன். மிகக்குறுகிய காலத்திலேயே பல படங்கள் கொடுத்து அனைத்து படங்களும் வெற்றி கண்டவர் நடிகர் மோகன். இவர் மூடுபனி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் இவர் கதாநாயகனாக நடித்த நெஞ்சை கில்லாதே திரைப்படம் 365 நாட்கள் ஓடி மாபெரும் சாதனை படைத்தது.
இந்த வரிசையில் இரண்டாம் இடம் பிடித்திருப்பவர் நடிகர் கார்த்திக். இவர் நடித்த அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தப்படத்தில் நடிகர் கார்த்திக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இவரது பயணம் 40 வருடங்கள் தாண்டியும் இன்றும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.
நடிகர் மாதவன் இவர் தனது துள்ளலான நடிப்பின் மூலம் பெண்களின் மனதை கவர்ந்தவர். மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே என்ற படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. கார்த்திக் என்ற கேரக்டரில் இவரது நடிப்பு பலரையும் வெகுவாக கவர்ந்தது.
அடுத்ததாக நடிகர் கார்த்தி இவர் அமீர் இயக்கத்தில் பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியாமணி நடித்திருந்தார். கிராமத்து சாயலில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றி கொடுப்பது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.