வங்கிகளில் பிக்சட் டெபாசிட் என்ற நிலையான வைப்பு நிதித் திட்டத்தில் முதலீடு செய்வது என்பது கையிருப்பில் உள்ள பணத்தை வேகமாக பெருக்குவதற்கு சிறந்த வழிகளில் ஒன்றாகும். இதன் மூலம் குறைந்த காலத்திற்குள் உங்களது சேமிப்புப் பணத்தை இரட்டிப்பாக்கலாம். இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தொடங்கி பல்வேறு வங்கிகள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வு கொண்ட ஃபிக்சட் டெபாசிட் சேமிப்புத் திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்குகின்றன.
எனவே டெபாசிட் செய்வதற்கு முன்னர், எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்த்து அதன்படி திட்டமிட்டுச் சேமித்தால் நல்ல லாபம் கிடைக்கும். தற்போதைய நிலையில் இந்தியாவில் உள்ள முன்னணி தனியார் வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு எவ்வளவு வட்டி லாபம் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
டிசிபி பேங்க்!
5.70 சதவீதம் முதல் 6.50 சதவீதம் வரை.
இந்தஸ் இந்த் பேங்க்!
5.50 சதவீதம் முதல் 6.50 சதவீதம் வரை.
ஆர்.பி.எல். பேங்க்!
5.40 சதவீதம் முதல் 6.50 சதவீதம் வரை.
யெஸ் பேங்க்!
5.25 சதவீதம் முதல் 6.50 சதவீதம் வரை.
டி.என்.எஸ்.சி. பேங்க்!
5.75 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை.
ஐ.டி.எஃப்.சி. ஃபர்ஸ்ட் பேங்க்!
5.25 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை.
கரூர் வைஸ்யா பேங்க்!
4.25 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை.
ஆக்சிஸ் பேங்க்!
4.40 சதவீதம் முதல் 5.74 சதவீதம் வரை.
சவுத் இந்தியன் பேங்க்!
4.50 சதவீதம் முதல் 5.65 சதவீதம் வரை.
ஃபெடரல் பேங்க்!
4.40 சதவீதம் முதல் 5.50 சதவீதம் வரை.