Categories
அரசியல்

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியில் திடீர் மாற்றம்…. புது ரேட் இதுதான்…. ஐசிஐசிஐ வங்கி அறிவிப்பு….!!!!

கடந்த சில நாட்களாக ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை பல்வேறு வங்கிகள் உயர்த்தி வருகின்றன. அதன்படி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. அந்த புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

2 கோடி முதல் 5 கோடி வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி குறைந்தபட்சமாக 2.50 சதவீதம் வட்டியும், அதிகபட்சமாக 4.80 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகின்றது. ஐசிஐசிஐ வங்கியில் பொது வாடிக்கையாளர்களுக்கும் சீனியர் சிட்டிசன்களுக்கும் ஒரே வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

30 – 45 நாட்கள் : 2.75%

46 – 60 நாட்கள் : 2.75%

61 – 90 நாட்கள் : 3%

91 – 120 நாட்கள் : 3.35%

121 – 150 நாட்கள் : 3.35%

151 – 184 நாட்கள் : 3.35%

185 – 210 நாட்கள் : 3.60%

211 – 270 நாட்கள் : 3.60%

271 – 289 நாட்கள் : 3.80%

1 ஆண்டு – 389 நாட்கள் : 4.35%

390 நாட்கள் – 15 மாதம் : 4.35%

15 மாதம் – 18 மாதம் : 4.45%

18 மாதம் – 2ஆண்டு : 4.60%

2 ஆண்டு 1 நாள் – 3 ஆண்டு : 4.70%

3 ஆண்டு 1 நாள் – 5 ஆண்டு : 4.80%

5 ஆண்டு 1 நாள் – 10 ஆண்டு : 4.80%

Categories

Tech |