தனியார் வங்கியான பந்தன் வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தை 0.50% உயர்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பெரும்பாலான வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் நிலையில் பந்தன் வங்கி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் மே 4ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. குறைந்தபட்சமாக 3% வட்டி வழங்குகிறது பந்தன் வங்கி. அதிகபட்சமாக 6.25% வட்டி வழங்கப்படுகிறது.
புதிய வட்டி விகிதங்கள்:
7 – 14 நாட்கள் : 3%
15 – 30 நாட்கள் : 3%
31 நாட்கள் – 2 மாதம் : 3.50%
2 மாதம் – 3 மாதம் : 3.50%
3 மாதம் – 6 மாதம் : 3.50%
6 மாதம் – 1 ஆண்டு : 4.50%
1 ஆண்டு – 18 மாதம் : 5.75%
18 மாதம் – 2 ஆண்டு : 5.75%
2 ஆண்டு – 3 ஆண்டு : 6.25%
3 ஆண்டு – 5 ஆண்டு : 6.25%
5 ஆண்டு – 10 ஆண்டு : 5.60%