இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு தற்போது வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. அந்த புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. ரிசர்வ் வங்கி கடந்த மாதம் ரெப்போ வட்டியை உயர்த்தியது. அதனால் பல்வேறு வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. அதன்படி தற்போது இந்தியன் வங்கியில் பிக்சட் டெபாசிட் வட்டியை தற்போது உயர்த்தியுள்ளது.
புதிய வட்டி (2 கோடி ரூபாய் வரை):
7 – 14 நாட்கள் : 2.8%
15 – 29 நாட்கள் : 2.8%
30 – 45 நாட்கள் : 3%
46 – 90 நாட்கள் : 3.25%
91 – 120 நாட்கள் : 3.5%
121 – 180 நாட்கள் : 3.75%
181 நாட்கள் – 9 மாதம் : 4%
9 மாதம் – 1 ஆண்டு : 4.4%
1 ஆண்டு : 5.1%
1 ஆண்டு – 2 ஆண்டு : 5.2%
2 ஆண்டு – 3 ஆண்டு : 5.25%
3 ஆண்டு – 5 ஆண்டு : 5.35%
5 ஆண்டு : 5.35%
5 ஆண்டுகளுக்கு மேல் : 5.35%