Categories
தேசிய செய்திகள்

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி திடீர் மாற்றம்…. புதிய ரேட் இதுதான்…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தற்போது ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 14-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பெரும்பாலான வங்கிகள் தற்போது வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

புதிய வட்டி:

7 – 14 நாட்கள் : 3%

15 – 29 நாட்கள் : 3%

30 – 45 நாட்கள் : 3%

46 – 90 நாட்கள் : 3.25%

91 – 179 நாட்கள் : 4%

180 – 270 நாட்கள் : 4.5%

271 நாட்கள் – 1 ஆண்டு : 4.5%

1 ஆண்டு : 5.2%

1 ஆண்டு – 2 ஆண்டு : 5.2%

2 ஆண்டு – 3 ஆண்டு : 5.3%

3 ஆண்டு – 5 ஆண்டு : 5.5%

5 ஆண்டு – 10 ஆண்டு : 5.6%

1111 நாட்கள் : 5.5%

Categories

Tech |