ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 4.90 ஆக உயர்த்தியது.இதனைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. அவ்வகையில் தனியார் வங்கியான இன்டஸ் இன்ட் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்த ஜூன் 21 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப் படுவதாகவும் அறிவித்துள்ளது.
புதிய வட்டி:
7 – 14 நாட்கள் : 3.25%
15 – 30 நாட்கள் : 3.5%
31 – 45 நாட்கள் : 3.7%
46 – 60 நாட்கள் : 3.8%
61 – 90 நாட்கள் : 4%
91 – 120 நாட்கள் : 4.4%
121 – 180 நாட்கள் : 4.5%
181 – 210 நாட்கள் : 4.75%
211 – 269 நாட்கள் : 5%
270 – 354 நாட்கள் : 5.5%
355 – 364 நாட்கள் : 5.5%
1 ஆண்டு -1 ஆண்டு 6 மாதம் : 6%
1 ஆண்டு 6 மாதம் – 2 ஆண்டுகள் : 6.25%
2 ஆண்டுகள் – 61 மாதம் : 6.5%
61 மாதங்களுக்கு மேல் : 6%
வரி சேமிப்பு திட்டம் (5 ஆண்டு) : 6.5%