Categories
மாநில செய்திகள்

ஃபிட்மென்ட் ஃபாக்டர்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும்?…. வெளியாகுமா குட் நியூஸ்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டுமாக ஒரு நல்லசெய்தி இருக்கிறது. முதலாவதாக அகவிலைப்படி, பின் வீட்டுவாடகை கொடுப்பனவு மற்றும் பயணப்படி, பதவி உயர்வு என பல்வேறு வித அதிகரிப்புகளை பெற்ற பிறகு தற்போது ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களின் சம்பளம் இதன் வாயிலாக மீண்டும் ஒரு ஏற்றத்தைக்காணும். பல்வேறு ஊடக அறிக்கைகளின் படி ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிப்பது தெளிவாகி இருக்கிறது.

பிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்புடன் மத்திய ஊழியர்களின் குறைந்தபட்சம் ஊதியமும் அதிகரிக்கும். இதனிடையில் மத்திய-மாநில அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்திலிருந்து 3.68 சதவீதம் ஆக அதிகரிக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாகவே இருந்து வருகிறது. ஜூன்மாதம் இறுதிக்குள் சம்பளத்தில் அதிகரிக்கப்பட்ட ஃபிட்மென்ட் ஃபாக்டர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப்பின் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளமும் அதிகரிக்கும்.

சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்..?

பிட்மென்ட் ஃபாக்டர் உயர்வால் ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும். பிட்மென்ட் ஃபாக்டரை உயர்த்துவது குறைந்தபட்ச ஊதியத்தையும் அதிகரிக்கும். இப்போது ​​பணியாளர்கள் 2.57 % ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊதியம் பெற்று வருகின்றனர். தற்போது அதனை 3.68 சதவீதம் ஆக அதிகரிக்க பரிசீலிக்கப்படுகிறது. இவ்வாறு நடந்தால் ஊழியர்களின் குறைந்தபட்சம் சம்பளம் 8 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்படும். அதாவது இதுவரையிலும் 18,000 ரூபாய் என்ற சம்பளம் 26,000 ரூபாயாக அதிகரிக்கும்.

பிட்மென்ட் ஃபாக்டரை 3 மடங்கு அதிகரிக்க வலியுறுத்தல்:

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைபடுத்த அரசாங்கம் விரும்புகிறது. இருப்பினும் 7-வது சிபிசி இன் கீழ் குறைந்தபட்சம் சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசு ஆதரவாக இல்லை. அரசாங்கம் பிட்மென்ட் ஃபாக்டரை 3 மடங்கு அதிகரிக்கக்கூடும். பிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பால் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூபாய் 18000-ல் இருந்து ரூ.21000 ஆக அதிகரிக்கும்.

அமைச்சரவை செயலாளருடனான ஊழியர்சங்க கூட்டத்திலும் இதற்கான உறுதியளிக்கப்பட்டது. தற்போது அரசு ஃபிட்மென்ட் ஃபாக்டரில் அதிகளவு கவனம் செலுத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதனிடையில் நீண்டநாட்களாக காத்திருந்த மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1 முதல் அதிகரிக்கப்பட இருக்கிறது. ஊடகஅறிக்கைகளின் அடிப்படையில் அரசாங்கம் ஜூலை 1 முதல் அகவிலைப்படியை 5 % அதிகரிக்கக்கூடும். அதன்பின் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் எவ்வளவு ஏற்றமிருக்கும் என்பதை பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

Categories

Tech |