பிட்மென்ட் பாக்டர் மாற்றத்திற்காக வெகு நாட்களாக காத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை அளிக்கும். பிட்மென்ட் பாக்டரில் மாற்றம் ஏற்பட்டவுடன் சம்பள அமைப்பில் பெரியமாற்றம் ஏற்படும். இதுகுறித்த செய்தியின் அடிப்படையில், செப்டம்பர் இறுதியில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் கீழ் ஊழியர்களின் சம்பளமானது அதிகரிக்கலாம். இதுதவிர பிட்மென்ட் பாக்டர் பற்றி செப்டம்பர் மாதத்திலேயே அரசு முடிவெடுக்கக்கூடும். இவற்றில் மாற்றம் வந்தவுடன் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் அதிகரிக்கும். பிட்மென்ட் பேக்டரில் மாற்றம் ஏற்பட்டவுடன் அதன் விளைவு முழுசம்பளத்திலும் தெரியும். பிட்மென்ட் பாக்டர் குறித்து செப்டம்பர் மாத இறுதிக்குள் ஒரு சந்திப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்மென்ட் பாக்டரில் மாற்றங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டால் 52 லட்சத்துக்கும் அதிகமான மத்திய ஊழியர்களின் அடிப்படை சம்பளம், பிட்மென்ட் பாக்டரின் கீழ் உயர்த்தப்படும். பிட்மென்ட் பாக்டரை அதிகரிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 2.57 % பிட்மென்ட் பாக்டர் வழங்கப்படுகிறது. இது செப்டம்பர் மாதத்தில் 3.68மடங்கு அதிகரிக்கக்கூடும். இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை தீர்மானிப்பதில் பிட்மென்ட் பாக்டர் முக்கியமான பங்கு வகிக்கிறது.
பிட்மென்ட் ஃபாக்டரில் மாற்றம் என்பது உங்களது சம்பளத்தையும் பாதிக்கும். இதனடிப்படையில் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயர்த்தப்படுகிறது. பிட்மென்ட் பாக்டரை 2.57-ல் இருந்து 3.68ஆக உயர்த்தினால் குறைந்தபட்சம் அடிப்படை சம்பளம் 18 ஆயிரத்திலிருந்து 26 ஆயிரமாக அதிகரிக்கும். முன்பாக கடந்த 2017 ஆம் வருடம் தொடக்கநிலை ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தை உயர்த்தி அரசு மகிழ்ச்சியளித்தது. எனினும் அதன்பின் அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இப்போது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்சம் சம்பளம் ரூபாய்.18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூபாய்.66,900 ஆகவும் இருக்கிறது.