Categories
தேசிய செய்திகள்

ஃபிட்மென்ட் ஃபேக்டரை மாற்றுவது பற்றி…. விரைவில் வெளியாகும் குட் நியூஸ்….!!!!

பிட்மென்ட் பேக்டரை உயர்த்தவேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் வெகு நாட்களாகவே கோரிக்கை வைத்து வந்தனர். அத்தகைய ஊழியர்களுக்கு தற்போது ஒரு பெரிய செய்தி இருக்கிறது. நீங்களோ (அ) உங்கள் குடும்பத்தில் எவரேனும் மத்திய அரசு ஊழியர்களாக இருப்பின், அவர்களுக்கு இச்செய்தி மிகவும் உபயோகமாக இருக்கும். பிட்மென்ட் பேக்டரில் மாற்றம் ஏற்பட்டதும் சம்பள அமைப்பில் பெரியமாற்றம் ஏற்படும். அடுத்த வருடம் 7-வது ஊதியக்குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரியமாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இது தொடர்பான விபரங்ள் குறித்து இங்கு காணலாம். மத்திய அரசு ஊழியர்களுக்கு இப்போது 38% அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதனிடையில் பிட்மென்ட்பேக்டரை மாற்றுவது பற்றி அரசானது பரிசீலனை செய்து வருகிறது. அதனடிப்படையில் ஊழியர்களின் குறைந்தபட்சம் சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது. இப்போது ஊழியர்களின் குறைந்தபட்சம் சம்பளம் 18 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. பிட்மென்ட் பாக்டர் தொடர்பான முடிவெடுக்கப்பட்டால், குறைந்தபட்ச ஊதியம் 26,000 ரூபாயாக அதிகரிக்கும். அடுத்த வருடம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இம்முடிவை அரசு எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிட்மென்ட் பாக்டரை உயர்த்துவது குறித்து கோரிக்கை ஒப்புக்கொள்ளப்பட்டால், 52 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளமானது, பிட்மென்ட் பாக்டரின் கீழ் அதிகரிக்கும். பிட்மென்ட் பேக்டரை உயர்த்தவேண்டும் என்று அரசு ஊழியர்கள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு 2.57 % பிட்மென்ட் வழங்கப்படுகிறது. இதனை 3.68 மடங்காக அரசாங்கம் அதிகரிக்க கூடும்.

அரசு பிட்மென்ட் ஃபாக்டரை 2.57-ல் இருந்து 3.68ஆக உயர்த்தினால் குறைந்தபட்சம் அடிப்படைசம்பளம் 18 ஆயிரத்திலிருந்து 26 ஆயிரமாக அதிகரிக்கும். முன்பாக செப்டம்பர் 28ம் தேதி அரசாங்கம் அகவிலைப்படியை 4 % உயர்த்தி அறிவித்தது. முன்னதாக 34ஆக இருந்த அகவிலைப்படியானது இப்போது 38 சதவீதம் ஆக அதிகரித்து உள்ளது. ஜூலை 1, 2022 முதல் செயல்படுத்தப்பட்ட அகவிலைப்படியில் 3 மாத நிலுவைத்தொகையையும் பணியாளர்கள் பெறுகின்றனர். மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவித்தபின், பல்வேறு மாநில அரசுகளானது அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தது.

Categories

Tech |