Categories
தேசிய செய்திகள்

ஃபிட்மென்ட் ஃபேக்டர்: 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியாகப்போகும் ஹேப்பி நியூஸ்?…..!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த பிட்மென்ட் பேக்டர் பற்றி அரசு முடிவெடுக்கக்கூடும். இதன் வாயிலாக ஊழியர்களின் குறைந்தபட்சம் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும். இதற்குரிய வரைவு தயாரிக்கப்பட்டு அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படும். எங்களது கூட்டாளர் இணையதளமான ஜீ பிசினஸின் படி வரைவைச் சமர்ப்பித்தபின், ஜூலைமாத இறுதிக்குள் இப்பிரச்சினை தொடர்பான கலந்தாய்வு நடத்தப்படலாம். இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டால் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் பிட்மென்ட் பேக்டரின் கீழ் அதிகரிக்கப்படலாம்.

பணியாளர்களுக்கு பம்பர் சம்பளம் அதிகரிப்பு 

ஜூலை 1 2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புது அகவிலைப்படி பொருந்தும். ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில் ஜூலை 1 2022 முதல் அகவிலைப்படியில் 4 – 5 சதவீத அதிகரிப்பு இருக்கக்கூடும். அந்த வகையில் 38 – 39 % வரை அகவிலைப்படி அதிகரிக்கலாம். இதுவரையிலும் ஏப்ரல் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் எண்கள் வந்துள்ளது. இருப்பினும் மே மற்றும் ஜூன் எண்களுக்குப் பின், அரசாங்கம் அதனை அறிவிக்கக்கூடும். இதனிடையில் பிட்மென்ட் பாக்டர் அதிகரிப்புக்கு அரசாங்கம் ஒப்புக்கொண்டால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளமும், ஓய்வூதியமும் அதிகரிக்கும்.

குறைந்தபட்சமான அடிப்படை சம்பளத்தில் அதிகரிப்பு 

7-வது ஊதியக் குழுவில் மத்திய ஊழியர்களின் சம்பளம் பிட்மென்ட் ஃபாக்டரால் தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பிட்மென்ட் பாக்டர் அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்சம் சம்பளம் அதிகரிக்கும். இந்த பார்முலா காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் இரண்டரை மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இப்போது ஊழியர்களின் பிட்மென்ட் பாக்டர் 2.57 மடங்கு என்ற விகிதத்தில் இருக்கிறது. இதனடிப்படையில், குறைந்தபட்சம் அடிப்படை சம்பளம் ரூபாய் 18000 ஆகவும், அதிகபட்சம் அடிப்படை சம்பளம் ரூபாய் 56900 ஆகவும் இருக்கிறது.

ஊதியமானது எவ்வளவு அதிகரிக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்

இப்போதுள்ள பிட்மென்ட் பாக்டர் 

# 6-வது CPC பே பேண்ட்: பிபி 1

# தரஊதியம் =ரூபாய் 1800

# இப்போதைய நுழைவு ஊதியம்= ரூபாய் 7000

# 7-வது ஊதியக் குழுவின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் கணக்கீட்டுக்கு பிறகான நுழைவுச் சம்பளம்: 7000 x 2.57 = ரூ.18,000

பிட்மென்ட் பாக்டர் 3ஆக இருந்தால் என்ன நடக்கும்..?

# 6-வது CPC பே பேண்ட்= பிபி 1

# தரஊதியம்=ரூபாய் 1800

# இப்போதைய நுழைவு ஊதியம்= ரூபாய் 7000

# ஊதியக்குழுவின் பிட்மென்ட் பாக்டர் கணக்கீட்டுக்கு பிறகான நுழைவுச்சம்பளம்= 7000 x 3 = ரூபாய் 21,000

Categories

Tech |