Categories
தேசிய செய்திகள்

ஃபுட்பால் சாக்ஸ் ஆர்டர் செய்த நபருக்கு… பிரபல நிறுவனம் அனுப்பி வைத்த பொருள் என்ன தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

ஃபுட்பால் சாக்ஸ் ஆர்டர் செய்தவருக்கு பெண்கள் அணியும் பிராவை அனுப்பி வைத்துள்ளது மிந்த்ரா நிறுவனம்.

தற்போது ஆன்லைனில் நாம் ஒன்று ஆர்டர் செய்தால் அவர்கள் சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு பொருளை அனுப்பி வைப்பது தொடர்கதையாகி வருகின்றது. அந்த வகையில் பிரபலமான இ-காமர்ஸ் தளமான மிந்த்ராவில் ஒருவர் புட்பால் சாக்ஸ் ஆர்டர் செய்திருந்த நிலையில் அவருக்கு பிரா ஒன்றை அந்த நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது. லோகேஷ்வாலா என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: நான் மித்ரா தளத்தில் ஒரு புட்பால் சாக்ஸ் ஆர்டர் செய்து இருந்தேன்.

ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் தனக்கு கருப்பு நிறத்தில் பெண்கள் அணியும் பிராவை அணிந்து வைத்துள்ளனர். இது குறித்து நான் அவர்களிடம் புகார் செய்தபோது அவர் அதனை மாற்ற முடியாது என்று பதில் தெரிவித்துள்ளனர். இந்த ட்விட்டை வெளியிட்டுள்ள அவர் தான் புட்பால் விளையாடும் பொழுது சாக்ஸ்க்கு பதிலாக இந்த பிராவை அணிந்து விளையாட போவதாகவும், நான் ஸ்போர்ட்ஸ் பிரா வாங்கி உள்ளேன் என கருதி கொள்வதாகவும், கிண்டலாக பதிவு செய்துள்ளார். இந்த ட்விட் தற்போது வைரலாகி வருகின்றது.

Categories

Tech |