Categories
தேசிய செய்திகள்

“ஃபுல்லா தண்ணியைப் போட்டு… வகுப்பறையிலேயே மட்டையான தலைமை ஆசிரியர்”…. வைரலான புகைப்படம்….!!!

தலைமையாசிரியர் ஒருவர் மது போதையில் வகுப்பறையிலேயே படுத்து தூங்கிய சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், தற்போது தாக்கம் சற்று குறைந்துள்ளதை தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள கரிமேடு எனும் கிராமத்தில் தொடக்கப் பள்ளி ஒன்றின் தலைமையாசிரியர் நன்கு குடித்துவிட்டு மதுபோதை தலைக்கேறிய நிலையில் வகுப்பறையிலேயே படுத்து தூங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தலைமை ஆசிரியையின் பெயர் ராம் நாராயண் பிரதான் எனவும் இவர் குடித்துவிட்டு பள்ளி வகுப்பறையில் படுத்து தூங்கியதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வட்டார கல்வி அலுவலர் ஜே. எஸ். ஜோகி கூறுகையில் “அந்த ஆசிரியரின் நடத்தை காரணமாக நான் மிகவும் அவமானமாக உணர்கிறேன். மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளோம்” என்றார். இச்சம்பவம் குறித்து பள்ளி மாணவர்களிடம் விசாரித்ததில், அந்த ஆசிரியர் இதுபோல பலமுறை குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார் என கூறியுள்ளனர்.

Categories

Tech |