போதையில் 2 பேர் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்ட் எதிரே ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இந்த ஆட்டோ ஸ்டாண்ட்டை சேர்ந்த 2 ஓட்டுனர்கள் மது போதையில் அரை நிர்வாணத்தில் கட்டி புரண்டு சாலையில் சண்டை போட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் போது உச்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி மற்றும் பொம்மனம்பட்டி பகுதியைச் சேர்ந்த சண்முகராஜா என்பது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் ஆட்டோ ஓட்டுநர்கள். இந்நிலையில் ஆட்டோ ஸ்டாண்டில் நிற்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் அடிக்கடி மதுபோதையில் சண்டை போடுவதால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். மேலும் பஸ் ஸ்டாண்ட் எதிரே இருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட்டை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.