பிளஸ் டூ முடித்த ஆர்வமுள்ள மாணவர்கள், பெண்களுக்கு ஆடை வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பட்டயப் படிப்பை கிண்டியில் உள்ள ஆடை வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையம் இலவசமாக வழங்குகிறது. இந்தப் பயிற்சி ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது. பயிற்சி முடிந்ததும் ஆயத்த ஆடைத் துறையில் மாணவர்கள் உறுதியாக வேலை வாய்ப்பை பெற முடியும்.
இந்தத் திட்டத்தின்படி தினமும் 3 முதல் 4 மணி நேரம் செலவு செய்து ஆறு மாதம் முதல் ஒரு வருடத்தில் பயிற்சியை முடித்து வேலைக்குச் செல்லும் படியான நீண்டகால பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு ஜவுளி, ஆயத்த ஆடை வடிவமைப்பு மற்றும் தையல், வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆகியவற்றை வாய்மொழி மற்றும் செய்முறை விளக்கம் ஆக கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. பட்டயப்படிப்பில் சேர்ந்து பயிற்சி பெற ஆர்வமுள்ள மாணவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய செல்பேசி எண்கள்: 9840416769, 8072241314, 9952056889