ஃபேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி பணம் பறிக்கும் கும்பலால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய கம்பியூட்டர் காலத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மேலும் சமூக வலைத் தளங்களான ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல்வேறு செயலிகளை செல்போனில் டவுன்லோட் செய்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு கும்பல் பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி அதன் மூலம் மக்களிடம் பணம் பறித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து பணம் பறிக்கும் கும்பல் ஒருவருடைய பேஸ்புக் அக்கவுண்டை பதிவிறக்கம் செய்து அவரது போட்டோவை வைத்து அதில் ஒரு சில மாற்றங்களை மட்டுமே ஏற்படுத்துகின்றனர். அதன்பிறகு ஃபேஸ்புக் அக்கவுண்டில் உள்ள அவருடைய நண்பர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் உடம்பு சரியில்லை எனவும் அவசரமாக பணம் தேவைப்படுவதால் அதனை அனுப்பி வையுங்கள் என்று அனுப்புகின்றனர். இதனை நம்பிய ஒரு சில நண்பர்கள் 5000ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் ஒரு சில நண்பர்கள் மட்டுமே அதனைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள அவர்களது நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்து வந்துள்ளனர். அப்போது தான் இவ்வாறு பணம் திருடப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளொன்றுக்கு 4 முதல் 5 வரை இவ்வாறு பணம் பறிக்கும் புகார் வருவதால்,காவல்துறையினருக்கு அந்த கும்பலை பிடிப்பதற்க்கு பெரும் சவாலாகவே உள்ளது. எனவே மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருந்து கொள்ளுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.