Categories
மாநில செய்திகள்

“ஃபேஸ்புக் காதல்” இந்தியா-பாகிஸ்தான் எல்லையை தாண்ட தூண்டிய விபரீதம்…. இளைஞனை மீட்ட பாதுகாப்பு படையினர்…!!

ஃபேஸ்புக்கில் காதலித்த பாகிஸ்தானை சேர்த்தப் பெண்ணைக் காண இந்தியா இளைஞர் எல்லை தாண்ட முயற்சித்தபோது பாதுகாப்பு படையினர் மீட்டுலுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் முகமது சித்திக் என்ற நபர் தன் மகன் சித்திக் முகம்மது ஜிஷானை காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட மாநில போலீசார் ஜிஷானின் கைப்பேசி லொகேஷன் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியிலுள்ள டொலவிரா அப்பகுதியில் காட்டுவதாக அறிந்தனர். இதனை அறிந்த மகாராஷ்டிரா மாநில போலீசார் குஜராத்தில் உள்ள எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். குஜராத்தின் ரன் ஆஃப் கட்ச் வழியாக பாகிஸ்தானை அடைய ஜிஷான் திட்டமிட்டிருக்கிறார்.

எல்லை பகுதியினை அடைவதற்கு முன்னதாக அவர் விட்டுச் சென்றுள்ள பைக்கை பாசில் பார்க் என்ற இடத்தில் கண்டறிந்துள்ளனர். மேலும் எல்லையை அடைவதற்கும் முன்னதாக ஒன்றரை கிலோ மீட்டருக்கு முன்னர் ரன் ஆஃப் கட்ச் பகுதியில் வரட்சியின் காரணமாக உடல் சோர்வடைந்து சுய நினைவில்லாமல் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அங்கிருந்து ஏறக்குறைய 1200 கிலோ மீட்டர் பயணத்தை மேற்கொண்டு அப்பகுதியை அடைந்து பிறகு ஜிஷானை பாதுகாப்பாக மீட்டு முகாமிற்கு அழைத்துச் சென்ற பிஎஸ்எப் வீரர்கள் ஜிஷானிடம் விசாரணையை மேற்கொண்டனர்.

ஃபேஸ்புக் மூலமாக நண்பரான சம்ரா என்ற பெண்ணை தான் காதலிப்பதால் பாகிஸ்தானில் உள்ள கராச்சியின் ஷாஆஹ் ஃபைசல் டௌன் என்ற இடத்தில் அவர் இருப்பதால் பாகிஸ்தான் செல்ல முயற்சி செய்ததாக கூறியுள்ளார். மேலும் கூகுள் மேப் உதவியைக் கொண்டு இவ்விடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிவித்திருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே 2012-ல் இதைப் போன்றே ஒரு நபர் பாகிஸ்தானுக்கு இவ்வாறு எல்லையை கடந்து சென்றார். அப்போது பாகிஸ்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர் 6 வருடங்களுக்கு பின்னர் தான் விடுதலையானார். இந்திய எல்லை கடந்திருந்தால் ஜிஷானுக்கும் அத்தகைய நிலைதான் ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |