குக் வித் கோமாளி 2 கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கான புரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது . தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் கிராண்ட் பினாலே எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இந்த கிராண்ட் பினாலேவில் நடிகர் சிம்பு, பிக்பாஸ் முகின் ராவ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகி தீ மற்றும் அறிவு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
Last ல தான் ultimateu! 😂🤣#CookWithComali #GrandFinale – வரும் புதன்கிழமை மதியம் 2 மணிக்கு நம்ம விஜய் டிவில #VijayTelevision pic.twitter.com/tjUZTkjMTh
— Vijay Television (@vijaytelevision) April 11, 2021
மேலும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஆன்லைன் வீடியோ காலில் போட்டியாளர்களுடன் உரையாடியுள்ளார் . இந்நிலையில் குக் வித் கோமாளி 2 கிராண்ட் பினாலே புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ‘பைனல்ஸில் காரக் குழம்பு வைக்க போறீங்களா ?’ என கனியை கலாய்க்கிறார் ஏ ஆர் ரஹ்மான். தற்போது இந்த புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.