பிரபல தமிழ் சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன் தனது புகைப்படங்களை மார்பிங் செய்து பரப்புவதாக கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.சரவணன் மீனாட்சி சீரியலில் அம்மா கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் லட்சுமி.இந்த சீரியலைத் தொடர்ந்து இவர் தற்போது பல சீரியல்களிலும் அம்மா மற்றும் அக்கா கேரக்டர்களின் நடித்து வருகின்றார். நிலையில் சீரியல் நடிகை லட்சுமி தன்னுடைய போட்டோவை சிலர் மார்பிங் செய்து அசிங்கப்படுத்துவதாக கதறி அழுது பேசியுள்ளார்.
அதாவது கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி தன்னுடைய வாட்ஸப் நம்பருக்கு ஒரு மெசேஜ் வந்ததாகவும் அதில் உங்களுக்கு ஐந்து லட்சம் லக்கி பிரைஸ் என்று போடப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளார். உடனே அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் தனது போன் ஹேங் ஆகிவிட்டது. மூன்று நாட்கள் கழித்து ஐந்தாயிரம் ரூபாய் நீங்கள் லோன் வாங்கி இருப்பதாகவும் அதனை கட்ட வேண்டும் என மெசேஜ் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பிறகு வேறு நம்பரில் இருந்து கால் மற்றும் மெசேஜ் வந்துள்ளது.
அவரின் போனை ஹேக் செய்து போனில் இருந்து அனைத்து நண்பர்களையும் எடுத்துக்கொண்டு ஃபோட்டோவை அசிங்கமாக மார்பிங் செய்து தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் அனுப்பியுள்ளதாக அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.இதனால் யாரும் தயவு செய்து எந்த லோன் ஆப்புகளையும் தேவையில்லாமல் டவுன்லோட் செய்ய வேண்டாம் என அவர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.