ஃபோர்டு ஆலையில் டாடா எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஃபோர்டு உற்பத்தி ஆலையை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது .இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு நிறுவனங்களும் இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. மேலும் இந்த விற்பனை விவகாரத்தில். அனுமதி வழங்கக் கோரி இரு நிறுவனங்களும் குஜராத் அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர் இதை தொடர்ந்து அரசிடம் அனுமதி கிடைத்தால் இரண்டு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிவித்திருந்தனர்.
இதனிடையே டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு லட்சம் கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 2 ஆயிரம் கோடி முதலீடு செய்து உற்பத்தி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஃபோர்டு சனந்த் ஆலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் எனவும் வாக்குறுதி அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 23 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.