Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஃபோர்டு நிறுவன ஆலைகளை மூட முடிவு… 4,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!!

அமெரிக்காவைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் உள்ள தனது உற்பத்தி ஆலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, சென்னை அருகே மறைமலைநகரில் உள்ள ஆலையையும், குஜராத் மாநிலம் சனந்தில்  உள்ள ஆலையையும் மூட முடிவு செய்துள்ளது. ஏற்றுமதிக்காக எஞ்சின் உற்பத்தி தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்று போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலை மூடப்பட்டால் சுமார் 4,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. நான்கில் ஒரு பங்கு கார்கள் கூட உற்பத்தி செய்யப்படாத நிலையில், நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன..

Categories

Tech |