இந்தியாவின் கார் உற்பத்தியை நிறுத்துவதாகவும், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வருகின்ற இரண்டு கார் உற்பத்தி தொழிற்சாலைகளை மூட போவதாகவும் போர்டு கார் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் போர்டு நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். நேற்று மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களுடன் போர்டு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதையடுத்து இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகள் இந்திய சந்தையில் பல்வேறு மோட்டார் வாகன நிறுவனங்களுடன் போட்டி யிட்டு பார்த்தும் முதன்மை பெற முடியாததால், தனது உற்பத்தியை நிறுத்தும் விளிம்பில் போர்டு நிறுவனம் உள்ளது. கொரோனாவால் உண்டான சூழலும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.