பிரபல ஓடிடி தளமான நெட்பிலிக்ஸ் இன்று மற்றும் நாளை இலவச சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது.
நாட்டில் மிகவும் பிரபலமான ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் இந்திய மக்களிடையே தங்களின் தளத்தை கொண்டு சேர்க்கும் வகையில் இன்று மற்றும் நாளை இலவச சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த சேவையை இலவசமாக பெற வேண்டும் என்றால் https://www.Netflix.com/in/StreamFest என்ற தளத்திற்குச் சென்று உங்களுக்கான ப்ரோபைலை எந்த தளத்தில் உருவாக்கி, நெட்ப்ளிக்ஸ்-இல் இடம் பெற்றுள்ள திரைப்படங்கள் டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை இலவசமாக கண்டுகளிக்கலாம். இந்த அறிவிப்பு மக்களிடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.