சென்னையில் உள்ள பர்வீன் ஃபாஸ்ட் ஃபுட் கடையில் சாப்பிட்ட பீப் பிரைட் ரைசில்புழு இருந்ததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.சென்னை மிட் மினி தெருவில் ஹசன் என்பவருக்கு சொந்தமான பர்வீன் ஃபாஸ்ட் ஃபுட் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடைக்கு தனது நண்பர்களுடன் வந்த முகமது பெரோஸ் என்பவர் பீப் பிரைட் ரைஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அதில் புழு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து கடை ஊழியர்களிடம் கேட்டதற்கு அவர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளன. இதனால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து கடையை மூட போலீசார் உத்தரவிட்டனர்.
Categories