வடஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகுகள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வாழ்வாதாரத்திற்காக ஐரோப்பிய நாடுகளை நோக்கி 50-க்கும் அதிகமான அகதிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள் திடீரென்று நீரில் மூழ்கிவிட்டது. இதனால் தண்ணீரில் தத்தளித்தவர்களை அருகில் உள்ள கிராம மக்கள் மீட்டனர்.
அப்போது இறந்த நிலையில் 13 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், 37 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதையடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் காணாமல் போன பெற்றோரை குழந்தைகள் தேடி அலையும் காட்சி காண்போரை கண் கலங்க வைக்கிறது.