ஜெர்மனியில் ஒரு நபர் சிரியாவை சேர்ந்த அகதியை கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியில் உள்ள Erfurt என்ற நகரில் ஒரு ட்ராமில் சிரியாவைச் சேர்ந்த அகதியான 17 வயது இளைஞர் ஒருவர் பயணித்துள்ளார். அப்போது ஜெர்மனை சேர்ந்த 39 வயது நபர் ஒருவர் அந்த இளைஞரிடம் வேண்டுமென்றே வம்பிழுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், அந்த ஜெர்மனை சேர்ந்த நபர், அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியதோடு, அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார். மேலும் அவரின் முகத்தில் எச்சில் துப்பி, உதைத்திருக்கிறார். இதனை பார்த்துக்கொண்டிருந்த டிராமிலிருந்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் துரிங்கியா மாகாணத்தின் ஆளுநர் Bodo Ramelow, தன் ட்விட்டர் பக்கத்தில் இதனை கடுமையாக கண்டித்துள்ளார். மேலும் தாக்குதல் நடத்திய நபர் கைதானதாகவும் தெரிவித்திருக்கிறார்.