போலீஸ் பாதுகாப்புடன் அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் உள்ள செம்பகராயநல்லூர், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியானது நடந்து வருகின்றது. தெற்கு பூசாரி தோட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்க முடியாது என ரயில்வே நிர்வாகம் கூறியது. இதனால் அப்பகுதி மக்கள் முன்பு இருந்த ரயில்வே கேட்-டை பயன்படுத்தி வந்த நிலையில் சுரங்கப்பாதை அமைக்காமல் ரயில் பணி நடைபெற்று வருகின்றது. மேலும் மண்ணிறப்பும் பணிகள் நடந்து வருகின்றது.
இதனால் அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ரயில்வே துறையினர் வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரின் பாதுகாப்புடன் ரயில் பாதைக்கு மண்ணிறப்பும் பணி நடந்தது. இங்கு சுரங்கபாதை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தார்கள். முன்னதாக பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைக்க அனுப்பி மாநில நிதியில் இருந்து கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.