Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அகழாய்வு பகுதியை நேரில் பார்வையிட்ட நீதிபதி …!!

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கொந்தகை ஆகிய இடங்களில் அகழாய்வு நடைபெற்ற பகுதிகளை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. வைத்தியநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கீழடி மற்றும் கொந்தகை ஆகிய இடங்களில் கடந்த பல மாதங்களாக பல்வேறு கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதன் மூலம் தமிழர்களின் பண்டை பழங்கால நாகரிக அடையாளங்கள் அதிகம் கண்டெடுக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு நடைபெற்ற பகுதிகளுக்கு சென்று உயர்நீதிமன்ற நீதிபதி திரு. வைத்தியநாதன் பார்வையிட்டார்.

அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை பார்வையிட்டு அவற்றின் காலம் பயன்பாடு ஆகியன குறித்த தொல்லியல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு. ஜெயகாந்தன் தொல்லியல்துறை துணை இயக்குனர் சிவா நந்தம் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Categories

Tech |