Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அகவிலைப்படியை வழங்க வேண்டும்… ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்… கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதிய கூட்டமைப்பு சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து ஓய்வூதியர் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 1.1.2020 முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் எனவும், கடந்த 70 மாதங்களாக போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படியையும் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து குடும்ப நல நிதியை 1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தங்கியுள்ளார். மேலும் அரசு ஊழியர் கூட்டமைப்பு முருகேசன், போக்குவரத்து அமைப்பு பவுல்ராஜ், மின்வாரிய அமைப்பு ராமச்சந்திர பாபு, கணேசமூர்த்தி, முகமது சீது என பலரும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |