Categories
தேசிய செய்திகள்

அகவிலைப்படி உயர்வு: யாருக்கு எவ்வளவு கிடைக்கும்…??? வெளியான விவரம்…!!!

விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே அகவிலைப்படி 34 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 4 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதால், அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவர் என்று கூறப்பட்டுள்ளது. உதாரணமாக அடிப்படைச் சம்பளம் ரூ. 18,000 ஆக இருந்தால், அவருக்கு அகவிலைப்படி ரூ.720 உயரும். அடிப்படைச் சம்பளம் ரூ.25,000 ஆக இருந்தால் அகவிலைப்படி ரூ.1,000 உயரும். அடிப்படைச் சம்பளம் ரூ. 1 லட்சமாக இருந்தால் அகவிலைப்படி ரூ.4,000 உயரும்.

Categories

Tech |