Categories
மாநில செய்திகள்

“அகவிலைப்படி உயர்வு”…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. கூட்டுறவுத்துறை உத்தரவு….!!!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 01/01/2022 முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து வெளியிடப்பட்ட பார்வை(1)-ல் காணும் அரசாணையில் அகவிலைப்படி என்ற தலைப்பின் கீழ் “புதிய அடிப்படை ஊதியத்தில் 14 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும்” என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்குப் பின்னர் தொடர்ந்து வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு குறித்து எவ்வித ஆணையும் அரசாணையில் குறிப்பிடப்படவில்லை. ஆகவே உயர்த்தி வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி குறித்த ஆணை அரசிடமிருந்து பெற்று வழங்கப்படும் வரை, ரேஷன் கடை பணியாளர்களுக்கு 01/01/2022 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதை நிறுத்தி வைக்க தங்கள் மண்டலத்திலுள்ள சம்பந்தப்பட்ட அனைத்து சங்கங்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Categories

Tech |