அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கி வந்தது. இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் அந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. பின்னர் கடந்த அக்டோபர் மாதம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதன்படி அகவிலைப்படி 17 விழுக்காட்டில் இருந்து 31 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. எனினும், அகவிலைப்படி நிலுவைத் தொகை அரசு ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படாமலேயே உள்ளது. இந்த அகவிலைப்படி நிலுவைத் தொகையை எதிர்பார்த்து அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
ஒட்டுமொத்த அகவிலைப்படி நிலுவை தொகையும் எதிர்பார்த்து அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். மேலும் ஒட்டுமொத்த அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒரே செட்டில்மெண்டாக அரசு ஊழியர்களுக்கு செலுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகின்றது. இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு மார்ச் 16 ஆம் தேதி ஹோலி பண்டிகை அன்று வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.
மேலும் அகவிலைப்படி நிலுவைத் தொகை பொருத்தவரை, 18 மாதங்களுக்கு நிலுவைத் தொகையை மொத்தமாக செலுத்துவது தொடர்பாக அரசுக்கும், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இந்த பேச்சுவார்த்தையில் அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்குவது தொடர்பாக அரசு தரப்பில் ஊழியர்கள் கோரிக்கை வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அகவிலைப்படி நிலுவைத் தொகையை அரசு ஊழியர்களுக்கு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.