Categories
அரசியல் மாநில செய்திகள்

அகவிலைப்படி: மத்திய அரசை போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும்…. ஓபிஎஸ் வலியுறுத்தல்…..!!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தால் அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி உயர்வு 17 விழுக்காட்டில் இருந்து 31 விழுக்காடாக 01/01/2022 முதல்தான் ரொக்கமாக வழங்கப்படுகிறது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 01/07/2021-ல் இருந்து வழங்கிய 31 விழுக்காடு அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு ஊழியர்களுக்கு 01/01/2022 முதல் வழங்கப்பட்டது. அதன்படி ஆறுமாத காலம் தாமதமாக வழங்கப்பட்டது. இப்போது 01/01/2022-ல் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி மத்தியஅரசு 31/03/2022 அன்றே அறிவித்துவிட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு 24 நாட்கள் கடந்துள்ள சூழ்நிலையில், தமிழக அரசு ஊழியர் சங்கங்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டுமென்று ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் அகவிலைப்படிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. இவ்வி‌ஷயத்தில் அரசு அமைதியாக உள்ளதை பார்க்கும்போது, கடந்த முறை 6 மாதம் காலந்தாழ்த்தியதைப் போன்று இம்முறையும் அரசு தாமதப்படுத்துமோ என்ற சந்தேகம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மேலோங்கி இருக்கிறது. கொரோனா தொற்று சற்று குறைந்து அரசின் வருமானமும் அதிகரித்துள்ள சூழ்நிலையில், 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை ஒப்புவித்து பணமாக்கும் முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ளது போன்று அகவிலைப்படி உயர்வையாவது 01/01/2022-ல் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி, அதாவது 3 விழுக்காடு அதிகரித்து நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே முதல்வர் இதில் உடனே தலையிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 01/01/2022-ல் இருந்து 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக, அதாவது 3 விழுக்காடு உயர்த்த விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |