அகில இந்திய சப்-ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற மாணவியை அனைவரும் பாராட்டுகின்றனர்.
அகில இந்திய சப்-ஜூனியர் பாட்மிண்டன் போட்டி தெலுங்கானாவில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் வண்ணாரப்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷிகா கலந்து கொண்டார்.
இந்நிலையில் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் ரேஷிகா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த மாணவியை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், பள்ளியின் முதல்வர் முருகவேல் மற்றும் பிற ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.