Categories
மாநில செய்திகள்

அகில இந்திய தொழில் தேர்வு…. செப்டம்பர் 12 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

அகில இந்திய தொழில் தேர்வில் தனி தேர்வர்களாக பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த வருடம் ஜூலை மாதம் தேசிய தொழில் பயிற்சி குழுமத்தால் அகில இந்திய தொழில் தேர்வு நடத்தப்பட இருக்கின்றது. அதில் ஏற்கனவே ஒரு தொழில் பிரிவில் ஐடிஐ படித்து தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர், திறன்மிகு பயிற்சி தேசிய சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர், தாங்கள் படித்த செட்டாருடன் தொடர்புடைய தொழில் பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் பெற்று இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை செயற்கை செய்யப்பட்ட மாநில தொழில் பயிற்சி குழுமம் பயிற்சியாளர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவம் மற்றும் இது தொடர்பான முழு விவரம் அடங்கிய குறிப்பேடு ஆகியவற்றை www.skilltrainging.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை செப்டம்பர் 12ஆம் தேதிக்குள் அரசு தொழிற்பெயர்ச்சி நிலையம் முதல்வர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |