Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அகோரமூர்த்தியாக அருள்பாலிக்கும் சிவபெருமான்… 1008 சங்காபிஷேக பூஜை… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் அகோர மூர்த்திக்கு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காட்டில் சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் அகோரமூர்த்தி சுவாமியாக அருள்பாலித்து வருகிறார். அஷ்ட பைரவர்கள் இவரின் திருமேனி அடிப்பகுதியில் காட்சியளிப்பது விசேஷமாக கருதப்படுகிறது. இவரை வழிபட்டால் செல்வம் செழிப்பதோடு, எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்குவதாக ஐதீகம்.

அகோர மூர்த்தி சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் வருடந்தோறும் பங்குனி உத்திரத்தன்று நடைபெறுவது வழக்கம். அதன்படி 1008 சங்காபிஷேகம் இந்த வருடம் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. இதனை முன்னிட்டு 1008 சங்குகள் புனித நீரினால் நிறப்பப்பட்டு, சிறப்பு யாகமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அகோர மூர்த்தி ஸ்வாமிக்கு சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் தீபாராதனையும் காட்டப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |