மூன்று நாட்களாக வீட்டிற்குள் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் மாலா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாலா தனது வீட்டின் கதவை உள்புறமாக பூட்டி விட்டு உள்ளே சென்ற மாலா 3 நாட்களாக வெளியே வரவில்லை. இதுக்குறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினர்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாலா இறந்து கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மாலாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாலா எப்படி இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.