இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் கிராமத்தில் விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா, பவித்ரா(21) என்ற மகள்கள் இருந்துள்ளனர். இதில் சத்யா ஓதியம் கிராமத்தில் வசிக்கும் கனகராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு பவித்ரா வீட்டில் இருந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சத்யா உயிரிழந்தார்.
அதிலிருந்து யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இறந்த பவித்ரா நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பவித்ராவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.