சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் இருந்துள்ளனர். இதில் 2-வது மனைவி சாந்தி ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 4 மகள்கள் இருக்கின்றனர். இதில் 3 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. கடந்த ஒரு வருடமாக இளைய மகளான ஜோதிகா(16) என்பவர் அக்காள் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த சிறுமி ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.