ரயில்வே தண்டவாளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து இளம்பெண் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மல்லிகா நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவதாரணி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பவதாரணி துணி கடையில் பணிபுரியும் தனது அக்காவிற்கு சாப்பாடு கொடுத்துவிட்டு திருவெற்றியூர் காவல் நிலையம் அருகே சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மெட்ரோ ரயில் தண்டவாளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த பவதாரனியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.