Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அக்காவுடன் நிச்சயம்… தங்கையுடன் திருமணம்… சினிமா பாணியில் நடந்த திருமண நிகழ்வு…!!!

புதுக்கோட்டை அருகே அக்காவுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு தங்கையுடன் திருமணம் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி என்ற கிராமத்தில் ராமலிங்கம் மகன் ராஜ்குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். அவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் மருங்கபள்ளம் என்ற கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் மூத்த மகளுக்கும் திருமணம் செய்வதற்கு நிச்சயக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நேற்று முன்தினம் திருமணம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. அதற்காக கோவிலின் முன்பு விளம்பர பேனர்கள் மணமக்கள் வீட்டார்கள் சார்பாக வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மணப்பெண் நேற்று திடீரென மாயமானதாக மணமகன் வீட்டாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பிறகு மாப்பிள்ளையின் உறவினர்கள் அனைவரும் பெண் வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பெண்ணின் வீட்டார், அவளுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று கூறி, பெண்ணின் தங்கை ஆசிபாவுக்கு 19 வயது ஆகிறது, அதனால் எனது இளைய மகளை மணமகனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறியுள்ளனர். இருவீட்டாரும் ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து கோவிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த திருமண பேனர்கள் எடுக்கப்பட்டன. அதன்பிறகு ராஜ்குமார் மற்றும் ஆசிபா இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானதை அடுத்து, தங்கைக்கு திடீரென யோகம் அடித்துள்ளது என்று உறவினர்கள் கூறி மணமகளை வாழ்த்திச் சென்றார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |