கள்ளக்குறிச்சியில் சொத்துக்கு ஆசைப்பட்டு அக்காவையும் அவரது மகளையும் கொலை செய்த தங்கை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடலூர் மாவட்டம் வையாபுரியில் கணவருடன் வசித்து வரும் சுஜாதா ஆறு மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் பாண்டியன் குப்பத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அக்டோபர் 31-ஆம் தேதி சுஜாதாவின் அக்கா சுமதியும் தனது மகளுடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் சொத்துப் பங்கீடு தொடர்பாக கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சுஜாதா சொந்த அக்காவான சுமதி மீதும் அவரது மகள் ஸ்ரீநிதி மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் தாய், மகள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனையடுத்து சுஜாதா கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.