சேலம் மாவட்டத்தில் சகோதரி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் சகோதரன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டி பகுதியில் முத்து கவுண்டர் மற்றும் வீராக்காள் என்பவர்கள் வசித்து வந்தார்கள். இவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள். முத்து கவுண்டருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் பேரக்குழந்தைகளும், விராக்காளுக்கு திருமணமாகி கணவரும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் வீராக்காள் திடீரென இறந்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த வீராக்காளின் தம்பி முத்து கவுண்டர் அக்காவின் இறப்பு செய்தி கேட்டு திடீரென அதிர்ச்சி தாங்க முடியாமல் அவரும் உயிரிழந்துள்ளார். இவர்கள் இருவரும் சிறுவயது முதல் ஒருவருக்கொருவர் மிகுத்த பாசத்துடனும் இருந்த காரணத்தினாலேயே இருவரும் ஒரே நேரத்தில் இறந்துள்ளனர்.இச்சம்பவம் அவர்களது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.