பிரபல சீரியல் நடிகை நித்யா தாஸ் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் கண்ணான கண்ணே. இந்த சீரியலில் நடிகை நித்யா தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை நித்யா தாஸ் சமீபத்தில் தனது மகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘உண்மையில் இவர் உங்கள் மகளா? அல்லது தங்கையா?, அக்கா- தங்கச்சி போல இருக்கீங்க’ என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர் .