அக்கியம்பட்டி மலை பகுதியில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி அடுத்து இருக்கும் அக்கியம்பட்டியில் உள்ள மலைப்பகுதியில் செடிகளில் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளது.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக விடிய விடிய பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டன.