நடப்பு நிதி ஆண்டில் முதன்முதலாக சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு பின்னர் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் பாதிப்படைந்தது. நடப்பாண்டில் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் 14 சதவிகிதம் 8 சதவிகிதம் மற்றும் 5 சதவிகிதம் என்ற அளவில் வரிவருவாய் சரிவை சந்தித்திருந்தது. இந்நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தொழில்துறை மெல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் 10,5,155 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டையின் அக்டோபர் மாத வசூலை விட 10 சதவீதம் அதிகமாகும். மத்திய ஜிஎஸ்டி மூலம் 19,193 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டின் மூலம் 25,417 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் 52,540 கோடி ரூபாயும், கூடுதல் வரி மூலம் 8,011 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.