இந்தியாவில் கொரோனாவை ஒழிப்பதற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஒரு சில தனியார் மருத்துவமனையில் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது நாடு முழுவதும் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் மக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூணாவாலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “மத்திய அரசு எங்களுக்கு உதவி தருவதால் நிதி நெருக்கடி எதுவும் கிடையாது . நாங்கள் பிரதமர் அவர்களுக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். நாடு முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதால் கோவாக்ஸ் தடுப்பூசி அக்டோபர் மாதத்தில் மக்களுடைய பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதற்கு மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளிக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.