Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 1 ஆம் தேதி முதல்…. வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அரசாங்கத்தால் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். அந்த வகையில் சிறுசேமிப்பு திட்டத்திலிருந்து கேஸ் சிலிண்டர் விலை வரை பல்வேறு மாற்றங்கள் இவற்றில் அடங்கும். ஆகவே வரும் 1ம் தேதியிலிருந்து எந்தெந்த விதிகள் மாறப் போகிறது என்பது பற்றி தெரிந்துகொள்வோம். சிறுசேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதங்களானது ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு முறை மத்திய அரசு மூலம் பரிசீலிக்கப்படும். ஆகவே பிபிஎப், மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்றவற்றில் கிடைக்கும் வட்டித்தொகையை அரசாங்கம் விரைவில் அதிகரிக்கலாம். அதன் அடிப்படையிலேயே புது வட்டி விகிதங்களை மத்திய அரசு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று அறிவிக்கலாம்.

அதுமட்டுமின்றி இது அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கும். RBI அக்.. 1 முதல் கார்டு-ஆன்-பைல் டோக்கனை சேஷன் விதிகளை அறிமுகப்படுத்துகிறது. டோக்கனை சேஷன் முறை மாற்றத்துக்குப்பின், கார்டுதாரர்களுக்கு கூடுதல் வசதி மற்றும் பாதுகாப்பும் கிடைக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆன்லைன் வங்கிமோசடியைத் தடுப்பதே டோக்கனைசேஷன் முறையை நடைமுறைபடுத்தியதன் நோக்கம் ஆகும். மாதந்தோறும் முதல் தேதி, கேஸ் சிலிண்டர்களின் விலைகள் மதிப்பாய்வு செய்யப்படும்.

அதன்படி இந்த முறை எரிவாயு சிலிண்டர்களின் விலையானது குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்தால், செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் விதிகளில் பெரிய மாற்றம் வரப்போகிறது. டிமேட் கணக்கு வைத்திருப்போர் செப்டம்பர் 30, 2022க்குள் 2 காரணி அங்கீகாரத்தை முடிக்கவேண்டும். அதன்பின்பு தான் உங்களது கணக்கில் லாகின் செய்ய இயலும். நீங்கள் இதனை செய்யவில்லையெனில், உங்கள் கணக்கு திறக்கப்படாமல் போகலாம். அக்டோபர் 1ம் தேதி முதல் வரிசெலுத்தும் வாடிக்கையாளர்கள் அடல்பென்ஷன் யோஜனாவைப் பயன்படுத்திக்கொள்ள முடியாது.

Categories

Tech |