Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 1 முதல் இலவச சிகிச்சை…. ஆனால் இது கட்டாயம்….. அதிரடி அறிவிப்பு…..!!!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தினமும் 8000 வெளி நோயாளிகள், 2000 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் சிவப்பு ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஜிப்மர் மருத்துவமனையில் மாதம் தோறும் ரூ.2,499 வரை ஊதியம் பெறும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் இந்தியா முழுவதிலும் இருந்து இங்கே நோயாளிகள் வருகிறார்கள்.

இந்த மருத்துவமனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான சிவப்பு ரேஷன்கார்டு வைத்திருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே ஜிப்மரில் இலவசமாக வெளிப்புற மற்றும் உட்புற சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அனைவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான ரேஷன் அட்டையை கொண்டு வர வேண்டும். இந்த நடைமுறை அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. அதன் பிறகு வேறு எந்த வருமானச் சான்றிதழ் ஏற்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |